search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் விமான ஒப்பந்தம்"

    ‘முன்னனுபவம் இல்லாதவர்கள் ரபேல் விமானத்தை தயாரிப்பதை விட தன்னால் சிறந்த விமானம் தயாரிக்க முடியும் என காங்கிரஸ் எம்.பி சுனில் ஜாஹர் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். #MonsoonSession #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் கடும் மோதல் இருந்து வருகிறது. விமான தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்திடம் போர் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்து வருகிறது.

    இன்று பாராளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் இந்த பிரச்சனை வெடித்தது. மக்களவையில் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் ரபேல் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினர். பின்னர், பாராளுமன்றத்துக்கு வெளியே அவர்கள் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் போட்டதில் ஏற்பட்ட அமளிக்கு இடையிலும், அக்கட்சி எம்.பி சுனில் ஜாஹர் மத்திய அரசின் ரபேல் ஒப்பந்தத்தை கிண்டலடிக்கும் வகையில் பேசியது ரசிக்க வைத்தது. ‘ஒரு விமானம் கூட தயாரித்த முன் அனுபவம் இல்லாதவர்களை விட நான் நன்றாகவே ரபேல் விமானத்தை தயாரிப்பேன். எனக்கு ரபேல் ஒப்பந்தத்தை தர வேண்டும்’ என தான் கையில் வைத்திருந்த பேப்பரால் செய்யப்பட்ட விமான மாதிரியை காண்பித்தார்.

    மேலும், பேப்பர் விமானத்தை தயாரிக்க நேற்று இரவு வரை தான் நேரம் எடுத்துக்கொண்டதாக சுனில் ஜாஹர் பேசினார்.
    ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. #MonsoonSession #Congress #Modi #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

    இதனை அடுத்து, பொய்யான தகவல்களை ராகுல் தெரிவித்ததாக குறி அவர் மீது பாராளுமன்றத்தில் பாஜக உரிமை மீறல் தீர்மான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது. 



    மத்திய அரசு ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து ரகசியம் காப்பதுடன், நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது, அதில் தவறு நடந்துள்ளதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்திருந்தது.

    இந்நிலையில், ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து மோடி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியது உரிமை மீறல் பிரச்சினை என குறிப்பிட்டு மக்களவை காங்கிரஸ் தலைவர், மக்களவை சபாநாயகரிடம் இந்த நோட்டீசை இன்று அனுப்பியுள்ளார்.
    ரபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு அம்சம் இல்லை என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. #NoConfidenceMotion #RafaleDeal
    புதுடெல்லி:

    மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, “ரபேல் விமான ஒப்பந்தம் குறித்தான தகவல்களை வெளியிட இருநாடுகளுக்கு இடையில் ரகசிய காப்பு ஒப்பந்தம் இருப்பதாக மோடி அரசு கூறுகிறது. பிரான்ஸ் அதிபர் மாக்ரானுடன் நான் உரையாடிய போது இரு நாடுகளுக்கு இடையில் எந்த ரகசிய காப்பு ஒப்பந்தமும் இல்லை என்றார். மோடியின் நெருக்கடியினால் நிர்மலா சீதாராமன் பொய் கூறியுள்ளார்" என்றார்.

    ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பிரான்ஸ் மறுப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் அறிக்கையை கவனித்தோம். இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் 2008-ஆம் ஆண்டு ரகசிய காப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி பங்குதாரர் கூறும் உரிய தகவலை இரு நாடுகளும் சட்டப்பூர்வமாக ரகசியம் காக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பிரான்ஸ் அறிக்கையை அடுத்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “அவர்கள் (பிரான்ஸ்) விரும்பினால் அதை மறுக்கட்டும். பிரான்ஸ் அதிபர் (இம்மானுவேல் மாக்ரான்) என் முன்னால் தான் அதை கூறினார். அந்த சமயத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா ஆகியோரும் உடனிருந்தனர்” என கூறினார்.
    ×